கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஆயிரக்கணக்கான வயதான மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மருத்துவ கவனிப்புக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
முதுமையில் ஏற்படும் பார்கின்சன் அல்லது பக்கவாதம் போன்ற மருத்துவப் பிரச்சினைகளுக்கு என்.ஹெச்.எஸ் இதுவரை பணம் அளித்து வந்தது.

மார்ச் மாத இறுதியில் இருந்து ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு என்.ஹெச்.எஸ் தங்கள் சேவையை நிறுத்தி வைத்தனர். இதனால் சுமார் 25,000 பேர் குழம்பி இருந்தனர். இப்போது என்.ஹெச்.எஸ் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நியாயமற்ற முறையில் நிதியுதவிக்கு தகுதி இல்லை என்று கூறியுள்ளது. இதனால் குடும்பங்கள் ஆண்டுக்கு 100,000 டாலர் பில்களை எதிர்கொள்கின்றன.
பல சந்தர்ப்பங்களில், மதிப்பீட்டாளர்களுக்கும் பராமரிப்பு இல்லங்களுக்கும் இடையில் தொலைபேசியிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மதிப்பீட்டாளர் ஒருபோதும் நோயாளி அல்லது அவர்களது குடும்பத்தினரை சந்திப்பதில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இது குறித்து என்.ஹெச்.எஸ்யிடம் கேட்டப்போது,
ஒவ்வொரு ஆண்டும் 1000 க்கும் மேற்பட்டோர் நிதியிலிருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது.அவர்கள் NHSக்கு தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்படாவிட்டால், நிதி வழங்கப்படாது. மேலும் 23,250 டாலருக்கும் குறைவான சேமிப்பு இருந்தால் மட்டுமே பில்களுக்கு உதவி கிடைக்கும், என்றனர்.