திங்களன்று நியூயார்க் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பின்படி, நார்த் ஃபோர்க் கன்ட்ரி கிளப்பில் அக்டோபர் 17 அன்று நடந்த திருமணத்தில் 113 பேர் கலந்து கொண்டனர், அதில் அனாவசியமாக கூட்டம் போட்ட 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
நியூயார்க் அரசாங்கம் திருமணத்தை "சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வு" என்று அழைத்துள்ளது. ஏனெனில் 30 திருமண விருந்தினர்கள், மூன்று கிளப் ஊழியர்கள் மற்றும் ஒரு விற்பனையாளர் உட்பட குறைந்தது 34 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிகழ்விலிருந்து தொற்று பரவுவதை குறைக்க, 159 பேரை தனிமைப்படுத்த வேண்டியிருந்தது. மேலும் "பல பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன", என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நார்த் ஃபோர்க் கன்ட்ரி கிளப்பிடமிருந்து லைசன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், இடைநீக்கம் நிரந்தரமானது அல்ல, மேலும் இந்த வழக்கில் கிளப் "விரைவான மேற்கொண்ட சட்ட விசாரணையை நடத்த முடியும்",என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.