சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களில் ஐந்து பேர் புத்தாண்டை பந்து விளையாட்டுடன் கொண்டாடினர், ஆனால் பந்து கீழே செல்லாமல் மேல்நோக்கி சென்றது. அந்த ஐந்து எக்ஸ்பெடிஷன் 64 - நாசா விண்வெளி வீரர்கள் கேட் ரூபின்ஸ், மைக் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷானன் வாக்கர் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்வெளி வீரர் சோச்சி நோகுச்சி ஆவர்.

ஹாப்கின்ஸ் மேலும் கூறுகையில், "இந்த ஆண்டு வீட்டிலிருந்தே பலர் புத்தாண்டைக் கொண்டாடுவதால், உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்களும் பாரம்பரியத்தை விண்வெளிக்கு கொண்டு வந்துள்ளோம்", என்றார். குழுவினர் பின்னர் நேரத்தை கணக்கிட்டனர். ரூபின்ஸ் உலக வடிவான பந்தை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பந்தோடு சேர்ந்து இவர்களும் மிதந்தனர்.