
யானை மற்றும் மனிதர்களுக்கு இடையே நிகழ்கின்ற மோதலை தடுப்பதற்காக அதிகமான ஒலி எழுப்பி யானையை விரட்டும் வகையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புதிய தற்காப்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விவசாயிகளின் இரண்டாவது எதிரியாக கருதப்படுவது யானைகள் தான் . அறுவடை செய்யும் கால கட்டத்தில் யானைகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை சேதமடைய செய்வது காலங்காலமாக நிகழ்ந்து கொண்டே தான் வருகிறது. இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் ஒரு கருவியை கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த கருவியிடம் இருந்து வரும் வித்தியாசமான மற்றும் பயமுறுத்தும் ஒலியினால் யானைகள் பயந்து நிற்கும் மேலும் தொடந்து ஒலியினை எழுப்பும் யானைகள் காட்டிற்கு சென்று விடும். குறைந்தபட்சமாக 5 வினாடிகள் ஒலி முதல் 40 வினாடிகள் வரை ஒலி எழுப்பினால் யானைகளை விரட்டி விடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த கருவி எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் மற்றும் கேரளா, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளில் இந்த கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.