• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

தனது ஆதரவுடன் கூடிய புதிய ஒப்பந்தம் : டிரம்ப் கருத்து


சீனாவின் 'ByteDance' க்கு சொந்தமான டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனங்களான Oracle மற்றும் Walmart நிறுவனங்களுடன் தொடர்ந்து செயல்படும் விதமாக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதற்கு தனது ஆசிகள் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் நேற்று அமெரிக்காவின் டிக் டாக் மற்றும் வி-சார்ட் செயலிகளுக்கு தடை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சீனாவிடம், டிக் டாக்கில் உள்ள பயனர்களின் தகவல்கள் வழங்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தங்களது அச்சத்தை உணர்த்தியுள்ளனர். ஆனால் இதனை 'ByteDance' நிறுவனம் மறுத்தது. மேலும் இந்த ஒப்பந்ததம் குறித்து 'ByteDance' நிறுவனம் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கு சீனாவின் ஒப்புதல் அவசியம்.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதால், 'TikTok Global' என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தில் பெரும்பான்மையான அமெரிக்க இயக்குநர்கள், ஒரு அமெரிக்க தலைமை நிர்வாகி மற்றும் குழுவில் பாதுகாப்பு நிபுணர் இருப்பார்கள்.

Oracle மற்றும் Walmart நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் டிக் டாக்கின் தகவல்கள் Oracle நிறுவனத்தால் சேகரித்து வைக்கப்படும்.

புதிய டிக் டாக் நிறுவனம் "Oracle மற்றும் Walmart" -ஆல் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்" என்றும், இந்த ஒப்பந்தத்தால் நாட்டுக்கு புதிய வேலைகள் மற்றும் வரி வருவாயை வழங்கும் என்று டிரம்ப் கூறினார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios