ஈக்கள் நாசாவின் ஆய்வுக்கு உதவுகின்றன. உயிரினங்கள் விண்வெளியில் வாழும்போது மூளை செயல்பாடு மற்றும் தூக்க முறைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜீன்ஸ் ஸ்பேஸ் -7 என அழைக்கப்படும் இந்த சோதனை, ஈ மூளைகளிலிருந்து பெறப்பட்ட மரபணுப் பொருள்களை பயன்படுத்துகிறது . அதைக்கொண்டு 24 மணி நேர தூக்க சுழற்சியை சோதிக்கிறது. நாசா விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை எனப்படும் மரபியல் பரிசோதனையை மேற்கொண்டார். தற்போதைய சோதனையானது, எதிர்கால சோதனைகளில் விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்படும் ஈக்களை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் நுட்பத்தை நிரூபிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.