• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இன்று நாசா அனுப்பிய செயற்கைக்கோள் என்ன செய்ய போகிறது??


நாசா கடந்த 28 ஆண்டுகளாக கடலின் உயரத்தை அளவிட செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகையில், முன்பை விட அதிக துல்லியத்தை பெறும் வகையில் இன்று மதியம் சென்டினல் -6 மைக்கேல் ஃப்ரீலிச் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி உள்ளது.


நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், NOAA ஆகியவை இணைந்து உருவாக்கிய சென்டினல் -6, இன்று மதியம் 12:17 மணிக்கு ஏவப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் ஏவப்பட்டது.



செயற்கைக்கோள் அதன் துருவ சுற்றுப்பாதையைப் பின்பற்றுவதால், அதன் நிலை மற்றும் கடலின் மேற்பரப்பிற்கு மேலே உள்ள தூரத்தை கணக்கிட செயற்கைக்கோள் மூன்று கருவிகளைப் பயன்படுத்தும். "இது வானத்தில் ஒரு புதிய நட்சத்திரமாக இருக்கப்போகிறது, இது கடல் மட்ட உயர்வு, கடல் அலைகள் மற்றும் காற்று ஆகியவற்றின் சிறந்த அளவீடுகளை எங்களுக்குத் தரவுள்ளது" என்று ESA உடனான சென்டினல் -6 மிஷன் விஞ்ஞானி கிரேக் டொன்லான் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


கடல் மேற்பரப்பின் உயரத்தை அளவிட, சென்டினல் -6 அதன் அதிநவீன போஸிடான் -4 ரேடார் ஆல்டிமீட்டரைப் பயன்படுத்தி ரேடாரை வெளியிடும். அந்த ரேடார் கடலிலுருந்து பிரதிபலிக்க எடுத்து கொள்ளும் நேரத்தை கொண்டு கடலின் உயரத்தை அளவிடும்.



ரேடார் துடிப்பின் வேகத்தை வளிமண்டலத்தில் உள்ள நீராவி பாதிக்கும் என்பதால், இரண்டாவது கருவி, மைக்ரோவேவ் ரேடியோமீட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி நீராவியை அளவிடும், மேலும் ஆல்டிமீட்டர் அதன் அளவீடுகளை சரியாக அளவீடு செய்ய அனுமதிக்கிறது.


கடல் மேற்பரப்பின் உயரத்தை அளவிடுவதோடு மட்டுமல்லாமல் கடல் அலைகளின் உயரத்தையும் கண்காணிக்கிறது.கடல் அலைகளின் உயரம் மாற பல காலங்கள் ஆகும் இதன் உற்றுநோக்கி கவனிப்பதன் மூலம் பல அழிவுகளை தடுக்கலாம் என்கின்றனர்,விஞ்ஞானிகள்.


Recent Posts

See All

பல மொழிகளைக் கற்க டியோலிங்கோ செயலி...

பல மொழிகளைக் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில் டியோலிங்கோ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சொன்னதை சொல்லும் கிளியின் உருவப்படத்தை வைத்திருக்கும் இந்த செயலி கற்போருக்கு சிறந்த நண்பனாக மாறுவதாக செயலியை ப

மனிதர்களிடமும் எலிகளிலும் இயற்கையாகக் காணப்படும் லிபோகலின் -2 ..

மனிதர்களிடமும் எலிகளிலும் இயற்கையாகக் காணப்படும் லிபோகலின் -2 என்ற ஹார்மோன் உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்கக் கூடியது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. எல்.சி.என் 2 ,உணவு உண்ட பிறகு திருப்தியை ஏற்

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios