• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மர்ம காடுகள்

உலகம் வித்தியாசமான மற்றும் அற்புதமான இடங்களால் நிரம்பியுள்ளது. பசுமையான மற்றும் அழகான காடுகளை பற்றி நாங்கள் பேசபோவதில்லை.


சில வித்தியாசமான காடுகளை பற்றி இங்கு பார்ப்போம்.


க்ரூக் காடு, போலந்து:

க்ரிஃபினோவில் உள்ள பைன் மரக்காடுகளில் பல மர்மங்கள் உள்ளன.



அங்கு 400 க்கும் மேற்பட்ட மரங்கள்

விசித்திரமான கோணத்தில் வளர்ந்துள்ளன.

இந்த நிகழ்வுக்கு என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. ஒரு சிலர் அவை தட்டை மரக்கன்றுகள் என்றும், மற்றவர்கள் மனித தலையீடு தான் காரணம் என்றும், மற்றவர்கள் இரண்டாம் உலகப் போரின்போது காடு வழியாக ஓடிய இராணுவ ஆயுதங்கள் நிலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.






தெளிவான ஏரி(Clear Lake) வனம், அமெரிக்கா:

நீருக்கடியில் முழுமையாக மூழ்கிய ஒரு காடு - கதைப்புத்தகத்திலிருந்து இருப்பது போல உள்ளது அல்லவா!! ஆனால் ஒரேகானில் உள்ள தெளிவான ஏரிக்கு செல்லும்போது பார்வையாளர்கள் கண்டுபிடிப்பது இதுதான்.



80 அடி உயர மரங்களை நீர் மறைக்கிறது. நீங்கள் மேற்பரப்பில் இருந்தோ அல்லது நீரில் மூழ்கும்போதோ மரங்களை பார்க்க முடியும். அங்கு வனவிலங்களும் வரும்.



டெட்வ்லே காடு,நமிபியா:

இந்த காடு அழகாகனது இல்லை, ஆனால் நமிபியா பாலைவனத்தில் ஏதோ மாயம் உள்ளது. இந்த மரங்கள் 900 ஆண்டுகள் பழமையானவை என்கின்றனர். பாலைவன வெப்பம் மரங்களை மக்காமல் வைத்துள்ளதாக கூறுகின்றனர்.






Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios