மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து, தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக ராணுவம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு ஜனநாயக ஆட்சி களைக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு விதமாக தங்களது எதிர்ப்பை மியான்மர் மக்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை என ராணுவம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. உரிமை கேட்டு போராடினால் சிறையா?? என்ற திகைப்பில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.
