இசை என்பது அனைவரது வாழ்விலும் முக்கிய பங்காற்றி வருகிறது. நம்முடைய எண்ணங்களை, உணருவகளை பிரதிபலிக்கின்ற விதமாக அன்று முதல் இன்று வரை உள்ள ஒரே கருவி என்றால் அது இசை மட்டுமே! மகிழ்ச்சியாக இருக்கும்போது இசையை கேட்பதும், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் போது பாடுவதும் மனிதனின் இயல்பு.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 106 வயது மூதாட்டி கோலாட்ட மெஸ் இசை மீது கொண்ட அதீத காதலால் தனது 6 ஆவது ஆல்பத்தை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த வயதிலும் கூட இசை மட்டுமே தனக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.