• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

உடல் முழுதும் பூஞ்சை வளர்ந்த மனிதன்!!!

30 வயதான அந்த நபர் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சில மன நோய்கள் முன்பு இருந்ததாக அவரின் குடும்பத்தினர் கூறினர். சமீபத்தில் அவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் அவரது மனச்சோர்வை சுய-மருந்து கொண்டு தீர்க்க முயற்சித்து உள்ளார். ​​காளான்கள் மற்றும் எல்.எஸ்.டி போன்ற சைகடெலிக் மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் சில நன்மைகளை அடைய கூடும் என்ற ஆராய்ச்சியை அவர் கண்டார். முதலில் காளான்களை "காளான் தேநீர்" போல் கொதிக்கவைத்து, பின்னர் கலவையை ஒரு பருத்தி துணியால் வடிகட்டி, ஊசி மூலம் அதனை உடலில் செலுத்தினார். விரைவில், அவர் சோம்பல், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, குமட்டல், இரத்தவாந்தி போன்ற அறிகுறிகளை பெற்றார். அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவரது நுரையீரல் மற்றும் சிறுநீரகம் உட்பட பல உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்தன. அவரது இரத்தத்தில் அவருக்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று இருப்பது சோதனைகள் மூலம் தெரியவந்தது. அதாவது அவர் செலுத்திய காளான்கள் இப்போது அவரை உணவாக உண்டு வளர்ந்து வருகின்றன. மருத்துவர்களின் கடும் முயற்சிக்கு பின்னர் அதிர்ஷ்டவசமாக, அவர் உயிர் தப்பினார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios