
மும்பையில் இருக்கின்ற பாலாஜி தோசை கடை, மங்கலதாஸ் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் ஸ்ட்ரீட் புட்-க்கு பெயர் போன இடமாகும். தற்போது இந்த கடையில் விற்கப்படும் பறக்கும் தோசை இணையத்தில் உலகளவில் வைரலாகி வருகிறது. சாதாரண முறையில் தோசை செய்து அதை பரிமாறும் விதத்தில் மிகவும் தனித்துவமாக விளங்குகிறது.பரிமாறும் விதத்தை பார்ப்பதர்காகவே பலர் இந்த இடத்திற்கு செல்கின்றனர்.