சீனாவில் ஒரு பெண் பொம்மை காரை ஒரு பிஸியான சாலையில் ஓட்டி சென்று போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவர் இளஞ்சிவப்பு நியான் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பொம்மை வாகனத்தில் சவாரி செய்வதையும், குவான்ஜோ நகரின் சந்திப்பில் விரைவாக வண்டியை திருப்புவதையும் கேமராவில் கண்டனர் . அவர் போலீசாரிடம் உள்ளூர் பூங்காவிற்கு பொம்மை வண்டியை வாடகைக்கு கொண்டு செல்லும்போது நேரத்தை மிச்சப்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார்.

லி என்ற பெயரை கொண்ட அவர் ஒரு பொம்மை கடையில் பணிபுரிந்து வருகிறார். அன்று மாலை, அந்தப் பெண் தனது முதலாளியால் கடையில் இருந்து வண்டி ஒன்றை பூங்காவிற்கு எடுத்துச் செல்லுமாறு ஏவப்பட்டார். அவர் கால்நடையாகப் பயணிப்பதற்குப் பதிலாக, பொம்மை காரைக் கொண்டு இலக்கை நோக்கி செல்ல முடிவு செய்தார். ஆனால் சாலையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களால் லி கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டபோது அவரது உல்லாசபயணம் நிறுத்தப்பட்டது.