பிரிட்டிஷ் சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 50 ஈரோ கைக்கடிகாரம், மக்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பணியாளர்களின் நல்வாழ்வைக் கண்காணிக்க உதவுகிறது. மூட்பீம் இரண்டு பொத்தான்களைக் கொண்டுள்ளது. அது அணிந்தவர் அவர்களின் மனநிலையைப் பொறுத்து நாள் முழுவதும் அழுத்த வேண்டும் -மகிழ்ச்சிக்கு மஞ்சள் மற்றும் மகிழ்ச்சியில்லாமைக்கு நீலம். இது தூக்கம் மற்றும் செயல்பாடு இரண்டையும் காட்டுகிறது.

ஒரு செயலி மூலம் இதை நாம் அறியலாம். எனவே பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் அன்புக்குரியவர்களின் மனநிலையைப் பார்க்க முடியும் மற்றும் விரைவான செய்தியுடன் அவர்களை அணுகலாம். நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு கைக்கடிகாரங்களை மொத்தமாக பரிசளிக்கலாம். இதன் மூலம் அவர்களின் மனநிலையை நிர்வாகி அறியலாம்.