தஞ்சை மேல அலங்கத்தில், ராஜா-புவனேஸ்வரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் வீடுகள் மிக மிக நெருக்கமாக அமைந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் குரங்குகள் அதிகமாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இவர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகள் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் தந்தை வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது
தாய் கழிவறைக்கு சென்ற நேரத்தில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த இரண்டு குரங்குகள் தூங்கி கொண்டிருந்த இறந்து பெண் குழந்தைகளை கையோடு தூக்கிவிட்டு சென்றனர். கழிவறையில் இருந்து வெளியே வரும் போது, குரங்கு குழந்தைகளை தூக்குவதை பார்த்து அதிர்ந்த தாய் வேகமாக ஓடி வருவதை பார்த்த குரங்குகள் குழந்தைகளுடன் ஓடி விட்டன.

குரங்குகளை விரட்ட அக்கம் பக்கத்தினர் படையெடுத்த பொது ஒரு குரங்கு அது கையில் வைத்திருந்த ஒரு குழந்தையை ஓட்டின் மேல் போட்டுவிட்டு ஓடியது. இந்த குழந்தையை பத்திரமாக மீட்டு விட்டனர். இன்னொரு குரங்கு அது கையில் வைத்திருந்த குழந்தையை தூக்கி கொண்டே துரத்த துரத்த ஓடியது. இறுதியாக அவர்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள அகழியில் குழந்தையை போட்டுவிட்டு சென்றது. இந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.