ஃபின்னிஷ் மிருகக்காட்சிசாலையில் உள்ள குரங்குகள் காட்டின் சத்தங்களை விட போக்குவரத்து ஒலிகளை விரும்புகின்றன . தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளின் வாழ்வை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் காண்பதற்கான ஒரு பரிசோதனை செய்தனர். சென்சார்கள் பொருத்தப்பட்ட சுரங்கப்பாதையை உருவாக்கினர். அதில் மூலம் மழை, போக்குவரத்து, ஜென் ஒலிகள் மற்றும் நடன இசை ஆகியவை ஒலித்தது. எந்தெந்த ஒலிகளு க்கு விலங்குகள் எப்படி பதில் அளிக்கின்றன என்பதை உற்று நோக்கினர்.

"ஜென் இசை போன்ற அமைதியான ஒலிகளை அவர்கள் விரும்புவார்கள் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் உண்மையில் அவை போக்குவரத்து ஒலியைத் தான் விரும்பின" என்று பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான இலியானா ஹிர்ஸ்கிஜ்-டக்ளஸ் கூறினார்.
ஆனால் வேறு எந்த ஒலி கேட்கும் போது செய்யாத குறும்புகளை போக்குவரத்து இரச்சலை கேட்கும் போது செய்தனர்.அடுத்ததாக சுரங்கப்பாதையின் உள்ளே திரைகளை நிறுவுவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம், என்றார்.