மியான்மரில் மீண்டும் ஜனநாயக கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளது என ராணுவத்தினரால் குற்றம் சாட்டப்பட்டு, ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அங்கு ராணுவ ஆட்சியையும் அமல்படுத்தப்பட்டது. இதை அந்நாட்டு மக்கள் முற்றிலுமாக எதிர்த்தனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
மக்களை கட்டுபடுத்த ரப்பர் வெடிகுண்டுகளை போடுதல், கண்ணீர் புகை குண்டுகளை போடுதல் மற்றும் தண்ணீரை பீச்சி அடித்தல் போன்ற செயல்களில் ராணுவத்தினரும் போலீசாரும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மக்களை கட்டுபடுத்த முடியவில்லை. இணையத்தை துண்டித்தல் போன்ற செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டும் கூட மக்கள் கட்டுப்படவில்லை. இந்த நிகழ்வில் பல்வேறு தரப்பினரும் ஜனநாயக ஆட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகிகின்றனர்.

அமெரிக்காவில் இயங்குகின்ற அமெரிக்க தூதரகம், " உலகமே உங்களை உற்று பார்த்து கொண்டிருக்கிறது மேலும் " என தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் ஆண்டோனியா கூறும் போது " நாங்கள் மியாமரில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என்று தெரிவித்து உள்ளார்.