மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை களைத்துவிட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிற்கு முன்பு வரை மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமைலயிலான தேசிய ஜனநாயக கட்சி அமோகமான வெற்றியை அடைந்தது. இந்த தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதை அடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களை களைப்பதற்காக , ரப்பர் குண்டுகளை வீசுதல், தண்ணீர் பீச்சி அடித்தல், துப்பாக்கி சூடு போன்றவற்றை ராணுவத்தினர் நடத்தி வருகின்றனர். இதற்க்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொருளாதார தடைகளை ஏற்படுத்தும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

மியான்மரில் நடக்கும் இந்த போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் சமூக வலைத்தளங்களில் சமூக போராளிகள் முதல் சக மனிதர்கள் வரை தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.