புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த ஒரு கால கட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது என்பதே ஒரு அசாதாரணமான நிலை தான். மூக்கினுள் உள்ள மாதிரியை எடுப்பதால் கொரோனா தோற்று மேற்கொள்பவர்களுக்கு ஒரு விதமான ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்நிலையில் சிறுநீர் மற்றும் வியர்வை மாதிரிகளை வைத்து கொரோனா நோய் தொற்றை கண்டறிய இந்திய ராணுவ நாய்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி நல்ல பலனை கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியால் வகை நாய்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் காஸ்பர் என்ற பெயருடைய காக்கர் ஸ்பேனியால் வகை நாய் நொடி பொழுதில் கொரோனா தொற்று உடையவரை கண்டுபிடித்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது. இதே போன்று பயிற்சி பெற சிப்பிப்பாறை நாய்களும் உடன் இருந்தன.