மிட்வெஸ்டர்ன் பெட் ஃபுட், இன்க்., தயாரிக்கும் ஸ்போர்ட்மிக்ஸ் என்பது செல்லப்பிராணிகளின் உணவுப் பொருட்களாகும். தற்போது இதை உண்டதனால் 28 நாய்கள் இறந்துவிட்டன. மேலும் எட்டு நாய்கள் சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்பட்டுள்ளன.

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, அமைப்பு விசாரித்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்போர்ட்மிக்ஸ் பிராண்ட்டை திரும்பவும் சோதனை செய்து வருகிறது. சோளம் மற்றும் செல்லப்பிராணி உணவில் உள்ள பிற தானியங்களில் வளரக்கூடிய பூஞ்சை அஸ்பெர்கிலஸ் ஃபிளாவஸ் இந்த சிக்கலுக்கு காரணமாக தெரியவந்துள்ளது. அதிக அளவில் அஃப்லாடாக்சின் வளர்ந்திருந்தால் செல்லப்பிராணிகள் நோய்வாய்ப்பட்டு இறக்கக்கூடும், என்கிறது FDA. "தயாரிப்புகள் ஆன்லைன் விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை கடைகளுக்கு தேசிய அளவில் விநியோகிக்கப்படுகின்றன," என அதிர்ச்சிகர தகவலை தெரிவிக்கின்றனர், மிட்வெஸ்டர்ன் பெட் ஃபுட் இன்க். மக்கள் எச்சரிக்கையாக உணவு பொருட்களை சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.