• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

உடம்பில் எளிதாக ஊடுருவக்கூடிய மைக்ரோ ரோபோட்


பசை போன்ற காந்த ஸ்ப்ரேயை பொருட்களின் மீது தெளிப்பதன் மூலம் மைக்ரோ ரோபோட்களை உருவாக்குவதற்கான ஒரு சுலபமான வழி கிடைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஹாங்காங்கின் சிட்டி யுனிவர்சிட்டி (சிட்டியு) விஞ்ஞானி தலைமையிலான கூட்டு ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டது. காந்தப்புலத்தால் பூசப்பட்ட பொருட்களை வெவ்வேறு மேற்பரப்பில் நகர்த்த முடியும் என்பதாலும், தேவைப்படும்போது பொடிகளாக சிதறும் என்பதாலும், மருந்து விநியோகம் உள்ளிட்ட உயிரியல் மருத்துவ பயன்பாடுகளில் இந்த ஆராய்ச்சி பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



எம்-ஸ்ப்ரே எனப்படும் காந்த கோட் பூசுவதன் மூலம், எந்தவொரு பொருளையும் ரோபோவாக மாற்றி அவற்றின் அசைவைக் கட்டுப்படுத்தலாம், ”என்று டாக்டர் ஷேன் விளக்கினார்.



ஒரு விசாலமான சூழலில் வேகமான 3 டி இயக்கத்தில் செல்லும். குறுகிய இடைவெளியைக் கடந்து செல்வதற்காக மெதுவான 2 டி இயக்கத்தில் நகர்கிறது.

இவ்வாறு ஒரே மில்லிரோபோட் வெவ்வேறு லோகோமோஷன் முறைகளுக்கு இடையில் மாறக்கூடும் என்பதை அவர்களின் சோதனைகள் காண்பித்தன.


எம்-ஸ்ப்ரேயுடன் பூசப்பட்ட காப்ஸ்யூல்கள் முயல்களுக்குள் செலுத்தப்பட்டது. எம்-ஸ்ப்ரேயின் கட்டுப்பாடான தன்மை, முயல் உடம்பில் மற்ற உறுப்புகளில் சிதறாமல், இலக்கு இடத்தில் மருந்து சேர உதவுகிறது,என்று டாக்டர் ஷேன் கூறினார்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios