சமீபத்தில் திருமதி மைக்கேல் ஒபாமா ஒரு ஓவியத்தை வாங்கி உள்ளார். தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக 27 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் 2018 ல் விடுவிக்கப்பட்ட வாலண்டினோ டிக்சனால் ஓவியம் வரையப்பட்டது. HBO இன் ரியல் ஸ்போர்ட்ஸில் டிக்சனின் கதையை பார்த்த திருமதி ஒபாமா மனம் கலங்கி உள்ளார்.

கோல்ப் விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட தனது கணவருக்கு ஒரு வகையான பரிசைத் தேடிக்கொண்டிருந்த அவர், 20 -30 அங்குல “அகஸ்டா தி பியூட்டிஃபுல்” ஓவியத்தை வாங்கினார். இந்த பரிசை நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன், ஒருவேளை ஒரு நாள் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் என்னுடன் வந்து பேசலாம் "என்று டிக்சன் ஒரு வீடியோவில் கூறினார். திருமதி ஒபாமா இந்த ஓவியத்தை வாங்கிய பிறகு கலைஞருக்கு பல ஆர்டர்கள் வந்தும் அவர் விலையை அதிகரிக்கவில்லை என்று கூறுகின்றனர்.