• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மருத்துவ தரவுகளை கை நழுவ விட்ட மருத்துவமனைகள்..


எக்ஸ்ரேக்கள், எம்ஆர்ஐ மற்றும் சிடி ஸ்கேன் உள்ளிட்ட 45 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ படங்கள், அதேபோல் அந்த படங்களில் உள்ளவர்களை அடையாளம் காணக்கூடிய தரவுகளும் பொது இணையத்தில் வெளிவந்துள்ளதாக புதிய ஆராய்ச்சி கூறுகிறது. மருத்துவ படங்கள் பாதுகாப்பு இன்றி ஆன்லைனில் வெளிவந்தது பலருக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் இருந்து வெளிவந்த மருத்துவத் ததகவல்களை சைபர் செக்யூரிட்டி நிறுவனமான சைபல் ஏஞ்சல் கண்டுபிடித்தது. மருத்துவ சாதனப் பாதுகாப்பு குறித்த ஆறு மாத கால விசாரணையின் போது, ​​வெளி நபர்கள் எளிதில் மருத்துவத் தரவை அணுக முடியும் என்பதையும் கண்டறிந்துள்ளது. டிஜிட்டல் இமேஜிங் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன் மெடிசின் (டிகோம்) போன்ற தரவுகளை ஹேக்கிங் கருவிகள் அல்லது கடவுச்சொல் கூட இல்லாமல் அணுக முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே இது ஹெல்த்கேர் ஹேக்கர்களுக்கான பொதுவான இலக்காக மாறி வருகிறது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios