• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பூக்களை கொண்டு கணிதம் படிக்கும் மாணவர்கள் - அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர் !!

மாணவர்களுக்கு கணித பாடத்தின் மீது ஒரு வகையான ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காரைக்கால் கோட்டுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் மலர்களை கொண்டு கணிதம் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


மாணவர்களுக்கு பெரும் சவாலாக அமையும் பாடப்பகுதி எதுவென்றால் அது கணிதம் தான்! அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெரும் மாணவர்கள் கூட கணிதத்தில் பெரும்பாலான நேரங்களில் குறைந்த மதிப்பெண்ணும், அனைத்து பாடங்களிலும் குறைவான மதிப்பெண் பெரும் சில மாணவர்கள் கணிதத்தில் மட்டும் அதிகமான மதிப்பெண்களை பெறுவது நிதர்சனமான ஒன்றுதான்.


கணித ஓவிய போட்டி, பாட்டுப்போட்டி, கணித கண்காட்சி, கணிதப்பட்டறை, பெருக்கல்வாய்ப்பாடு ஒப்புவிக்கும் போட்டி, நாடகம் மூலம் கணிதம் கற்றுக்கொடுத்தல் என வெவ்வேறு விதமான வித்தைகள் மூலம் மாணவர்களுக்கு கணிதம் கற்று கொடுத்து வந்த இவர் தற்போது, மலர்களை கொண்டு கணிதம் கற்பிக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது மாணவர்களை முகம் மலர செய்துள்ளது.




Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios