கலை வரலாற்று ஆசிரியர் ஜெஃப்ரி ஷாமோஸ் மற்றும் டென்வர் பல்கலைக்கழகத்தின் விக்கி மைஹ்ரென் கேலரியின் மேலாளர் லாரன் ஹார்டாக் ஆகிய இருவரும் 45 கலைஞர்களை முகமூடி தயாரிக்கும் போட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டனர்.

போட்டி குறித்து ஷாமோஸ் கூறுகையில், இதில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுப்பது கடினமானது என்று கூறுகிறார். ஆனால் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் பெயர்களுடன் பொறிக்கப்பட்ட மாஸ்க் “ஒவ்வொரு முறையும் என்னைத் தாக்கும்”, என்றார். அதே நேரத்தில் லிஸ் செக்ஸ்டனின் மீன் மாஸ்க் “பார்வையாளர்களைப் புன்னகைக்கச் செய்கிறது", என்றார்.
இன்னும் பல வித்தியாசமான மாஸ்க்கள் பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்துகிறது.அதில் ஒருவர் இனி புன்னகைகள் வெளியே தெரியும் என்ற வசனத்தோடு ஒரு கண்ணாடி மாஸ்க் அணிந்து இருந்தார்.மற்றொருவர் முகத்தில் மாவு போன்ற மாஸ்க் அணிந்து இருந்தார்
