
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ....
திருச்சி கரூர் பைபாஸ் சாலை அருகே உள்ள பெட்ரோல் பங் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல்,டீசல் மற்றும் சமயல் எரிவாயு சிலிண்டர் விலையை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள்
சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் - மேலும் நாளுக்கு நாள் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் இட்டனர்,இதே போல் ஸ்ரீரங்கம்,டி.வி.எஸ் டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.