ஜப்பானில் உள்ள தானெக்ஷிமா என்ற விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதி அல் அமால் என்று அரபு மொழியில் பெயரிடப்பட்ட (தமிழ் மொழியில் நம்பிக்கை என்று பெயரிடப்பட்ட) இந்த விண்கலம் 201 நாட்கள் பயணம் செய்து 2021 பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை சென்று அடைந்துள்ளது.
1.3 டன் எடை கொண்ட இந்த விண்கலம் 49 கோடியே 50 லட்சம் அளவில் உருவாக்கப்பட்டு ஹெச்-2ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.இந்நிலையில் சீனா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய ஒரு விண்கலம் நாளை நீள்வட்ட பாதைக்குள் நுழையும் என்று தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ப்ரஸர்வேரன்ஸ் விண்கலம் அடுத்த வாரத்தில் நுழையும் என எதிரிபார்க்கப்படுகிறது.

இது வரை 6 விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வருகின்றன. அமெரிக்காவின் 3 விண்கலங்கள், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இரு விண்கலங்கள், இந்தியாவின் சார்பில் ஒரு விண்கலம் சுற்றி வருகின்றன. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் காலநிலை, பருவநிலை, பூமியோடு ஒப்பிடும் பொது அது எவ்வாறு வேறுபட்டுள்ளது, மேலும் அங்குள்ள தன்மைகள் குறித்து ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.