• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

ஆழ்கடலில் நிகழ்ந்த அசத்தலான திருமணம் - பொறாமையில் பொங்குகின்ற கல்யாண ஜோடிகள்!!

இரு மனம் இணைவது தான் திருமணம் என்ற நிதர்சனத்தை தாண்டி, இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் என்பது வித்தியாசமான வகையிலும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய வகையிலும் நடத்த வேண்டும் என்பது இன்றைய தலைமுறையினரின் பெரிய கனவாகவே உள்ளது.



அத்தகைய கனவுகளில் ஒன்றான சின்னத்துரை - ஸ்வேதா ஜோடி, புதுச்சேரியில் ஆழ்கடலுக்குள் சென்று 60 அடி ஆழத்தில் , அலங்காரம் செய்யப்பட்ட வலயத்திற்குள் சென்று தங்க மாங்கல்யம் நாண் அணிவித்து , மாலை மாற்றி இந்து முறைப்படி கல்யாணம் செய்து கொண்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

அசத்துகின்ற ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் !!

ஆழ் கடலிற்குள் சுதந்திர தின கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என பண்டிகைகளை கொண்டாடி வந்த அரவிந் கொரோனா காலத்தில் கடல் மாசுப்பாடின்றி காட்சி அளிப்பதை வீடியோ எடுத்து பதிவிட்டு வந்துள்ளார். தற்போது ஆழ்கடலில் திருமணம் செய்ய விரும்பிய ஜோடியின் திருமணத்தையும் சிறப்பாக நடத்தி கொடுத்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


14 views0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios