இளம் வயதிலேயே விபத்துக்குள்ளான ராபர்ட் “புஸ்” சிமிலெவ்ஸ்கி,உடலை அசைக்க முடியாமல் வாதம் வந்து படுத்துவிட்டார்.கைகளில் உணர்வும் இல்லை. சமீபத்தில் அவர் தனது மனதைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடிந்த இரண்டு ரோபோ கைகளின் உதவியுடன் இனிப்பு உண்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சிமிலெவ்ஸ்கி 10 மணி நேர மூளை அறுவை சிகிச்சை செய்தார். இது நரம்பியல் சிக்னல்களைப் பயன்படுத்தி ரோபோவை கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சையாகும். நடைமுறையின் ஒரு பகுதியாக, அவரது மூளையின் இருபுறமும் ஆறு மின்முனை வரிசைகள் பொருத்தப்பட்டன. இப்போது ராபர்ட் தனக்கு உணவளிப்பது போன்ற பணிகளைச் செய்யுமாறு நினைத்தாலே போதும் . எந்த உணவை உண்ண வேண்டும், எங்கு வெட்ட வேண்டும், எவ்வளவு பெரிய வெட்டு துண்டு இருக்க வேண்டும் போன்றவற்றை நினைத்தால் ரோபோ செய்யும் ”என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தின் (ஏபிஎல்) முதன்மை ரோபோடிஸ்ட் கூறினார்.