தஞ்சையில் ATM உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது..

இன்று (15.06.2020) தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய SSI 2142 துரைராஜ் மற்றும் காவலர் 2290 ராகவேந்தரன் என்பவர்கள் அதிகாலை 02:15 மணிக்கு பட்டுக்கோட்டை போஸ்ட் ஆபிஸ் அருகில் இரவு ரோந்து பணியில் இருந்த போது அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்த சொன்னபோது அந்நபர் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக தப்பித்து செல்ல முயற்சி செய்தவரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குபின் முரணாக பேசியவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.இந்த நிலையில் காலை 8:45 மணிக்கு பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில்‌ உள்ள கனரா பேங்க் ATM உடைக்கப்பட்டு இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவயிடம் விரைந்து சென்று விசாரணை செய்து ATM ல் உள்ள CCTV camera வை ஆய்வு செய்ததில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக வைக்கபட்டிருந்த மதன்ராஜ் என்பவர் ATM மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மதன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். சிறப்பாக செயல்பட்ட இருவரையும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S. மகேஸ்வரன் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார். மற்றும் அப்பகுதி மக்களிடையே போலீசாரின் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

See All

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்ய

Earnbounty_1068_260_0208.jpg
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios