டைம்ஸ் பிரிட்ஜின் ஆதரவுடன் கூகுள் "மலேரியா நோ மோர்" என்ற ஒன்றை இன்று தனது ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள கூகுள்அசிஸ்டண்ட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது அனைவருக்கும் இலவசம்.
ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்கள் தங்கள் சாதனங்களில் உள்ள கூகுள் அசிஸ்டெண்ட்டிடம் 'மலேரியா நோ மோர்' பற்றி பேசுமாறு கட்டளையிட வேண்டும். கோரிக்கையின் அடிப்படையில்,பயனர் மலேரியா பற்றியும் அதன் அறிகுறிகள், தடுப்பு உதவிக்குறிப்புகள், சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் பிற அம்சங்களைப் பற்றிய பயனுள்ள தகவல்களை உடனடியாக பெறுவார். இது மலேரியா குறித்த பயனர்களின் கேள்விகளுக்கு உரையாடல் முறையில் பதிலளிக்கும் .

“கூகிள் அசிஸ்டெண்ட்டில் மலேரியா நோ மோர் தொடங்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதை உண்மையாக்கிய எங்கள் கூட்டாளர்களின் ஆதரவுக்கு நன்றி. இந்த தகவல் யுகத்தில், மலேரியா போன்ற கொடிய நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, பொது சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும், என்று டாக்டர். சஞ்சீவ் கய்க்வாத் தெரிவித்தார்.
உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கூகிள் அசிஸ்டண்டை பயன்படுத்துகின்றனர். மேலும் அதிகமான மக்கள் இப்போது தங்கள் சொந்த மொழியில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதை மனதில் கொண்டு, மலேரியா நோ மோர் ஆங்கிலம் மட்டுமன்றி இந்தியிலும் கிடைக்கும். மிக விரைவில் மூன்றாவது பூர்வீக இந்திய மொழியும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் தகவல்கள் பரந்த பார்வையாளர்களை சென்றடையக்கூடும்.