அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென், இந்திய-அமெரிக்கரான மாலா அடிகாவை தனது மனைவி ஜில் அவர்களுக்கு கொள்கை இயக்குநராக நியமித்துள்ளார்.

அடிகா, ஜில் பிடனின் 2020 பிரச்சாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராக இருந்தார். அவர் முன்பு பிடன் அறக்கட்டளையில் உயர் கல்வி மற்றும் இராணுவ குடும்பங்களுக்கான இயக்குநராக பணியாற்றினார். அதற்கு முன்னர், ஒபாமாவின் நிர்வாகத்தின் போது, அவர் கல்வி மற்றும் கலாச்சார பணியகத்தில் கல்வித் திட்டங்களுக்கான துணை உதவி செயலாளராக இருந்தார். மேலும் வெளியுறவுத்துறை, உலகளாவிய மகளிர் பிரச்சினை அலுவலகம் ஆகிய இடங்களிலும் பணியாற்றி உள்ளார். அரசாங்க சேவையில் நுழைவதற்கு முன்பு, அடிகா தன்னார்வத் தொண்டுகளிலும் , ஒபாமா ஜனாதிபதி பிரச்சாரத்திற்காகவும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது. அவர் சிகாகோ பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் தனது ஜே.டி.யையும் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் எம்.பி.எச். பட்டத்தையும் பெற்றார். இதனை தொடர்ந்து அவர் கிரின்னல் கல்லூரியில் ஸ்பானிஷ் மொழியில் பி ஏ பட்டம் பெற்றார். பிடென் தனது முதல் சுற்று வெள்ளை மாளிகை ஊழியர்களை வெளிப்படுத்திய சில நாட்களில் இத்தகைய புதிய அறிவிப்புகள் வந்துள்ளன.