• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

உலகளாவிய ஆசிரியர் பரிசுக்கான இறுதி 10ல் மகாராஷ்டிரா கிராம பள்ளி ஆசிரியர் இதன் பரிசு தொகை 1 மில்லியன்


சோலாப்பூரில் உள்ள பரிஷத் தொடக்கப்பள்ளி பள்ளி ஆசிரியர் ரஞ்சித் சிங் ட டிஸேல் உலகளாவிய ஆசிரியர் பரிசு விருதுக்கான இறுதி 10 இடத்தைப் பிடித்துள்ளார், இது அவரது பங்களிப்புக்கான பரிசு.


31 வயதான ரஞ்சித் சின் டிஸேல், 2009 ல் சோலாப்பூர் மாவட்டத்தில் பரிதேவாடி கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப்பள்ளிக்கு வந்தபோது,பாழடைந்த கட்டிடமாக ஒரு மாட்டுத்தொழுவம் மற்றும் ஒரு ஸ்டோர்ரூமுக்கு இடையில் அப்பள்ளி இருந்தது.

மாணவர்களுக்கு உள்ளூர் மொழியில் பாடப்புத்தகங்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் பணியை அவர் மேற்கொண்டார். வகுப்பு பாடப்புத்தகங்களை மாணவர்களின் தாய்மொழியில் மொழிபெயர்த்தது மட்டுமல்லாமல்,ஆடியோ கவிதைகள், வீடியோ விரிவுரைகள், கதைகள் மற்றும் ஒப்படைப்பு ஆகியவற்றை மாணவர்களுக்கு அணுகுவதற்கு தனித்துவமான QR குறியீடுகள் உருவாக்கினார்.

இதனால் கிராமத்தில் இப்போது டீனேஜ் திருமணங்கள் இல்லை, பள்ளியில் 100 சதவீதம் பெண்கள் வருகை தருகிறார்கள்.

டிஸேலின் பள்ளி தான் முதன்முதலில் கியூஆர் குறியீடுகளை அறிமுகப்படுத்தியது.பின்னர், அனைத்து பள்ளிகளிலும் க்யூஆர் குறியீடாக அறிமுகப்படுத்துவதாக மாநில அமைச்சகம் 2017 இல் அறிவித்தது. 2018 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பாடப்புத்தகம் அனைத்திலும் QR குறியீடுகள் இடம்பெறும் என அறிவித்தது.

சன்னி வர்கி -உலகளாவிய ஆசிரியர் பரிசை தொடங்கியவர்,

"உலகளாவிய ஆசிரியர் பரிசு, சமூகத்தில் ஆசிரியர்கள் வகிக்கும் முக்கிய பங்கைப் பற்றிய கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டது. இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த,விதிவிலக்கான ஆசிரியர்களின் வாழ்க்கையை இந்த விருது உயிர்ப்பிக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios