விடுமுறை நாட்களில் கூட நீங்கள் எரிச்சலையும், மன அழுத்தத்தையும், மனச்சோர்வையும் உணர்ந்தால், இந்த சிறிய ஊட்டச்சத்து உங்களுக்கு உதவக்கூடும். போதுமான மெக்னீசியம் உட்கொள்வதனால் மன அழுத்தத்தை அமைதிப்படுத்தவும், மனநிலையை மேம்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

மன அழுத்தம் மற்றும் பதட்டம்: மன அழுத்தங்கள் உங்கள் உடலில் உள்ள மெக்னீசியம் அளவைக் குறைக்கிறது மற்றும் குறைந்த மெக்னீசியம் அளவுகள் மன அழுத்தத்தை தீவிரப்படுத்துகின்றன- இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது. மனநிலை மற்றும் மனச்சோர்வு: மனநிலை ஒழுங்குமுறையில் ஈடுபடும் பல ஹார்மோன்கள் மற்றும் நரம்பியக்கடத்திகள் ஆகியவற்றிற்கு மெக்னீசியம் முக்கியமானது. மெக்னீசியத்தை அதிகரிப்பது ஆண்டி டிப்ரஸன்டாக திறம்பட செயல்படும்.
தூக்கம்: மூளையில் உள்ள நியூரான்களின் செயல்பாட்டைக் குறைக்கும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நரம்பியக்கடத்தியான காமா அமினோ பூட்யூரிக் ஆசிட் உடன் மெக்னீசியம் தொடர்பு கொள்கிறது. மேலும் இது ஆழ்ந்த தூக்கத்தைத் தூண்ட தசைகளை தளர்த்தும், மொத்த தூக்க நேரத்தையும் இது மேம்படுத்துகிறது. கீரை மற்றும் பிற அடர் பச்சை இலை காய்கறிகள் அதிக மெக்னீசியம் உடையவை ஆகும். கொண்டைக்கடலை, பீன்ஸ், பயறு போன்றவையும் நல்ல மூலங்கள். பாதாம் பருப்பு , முந்திரி, வேர்க்கடலை, ஆகியவையும் மெக்னீசியத்தின் நல்ல உணவுகள் ஆகும். பூசணி விதைகள், எள் ஆகியவற்றில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது.