நாடு முழுவதும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்தே ரோஸ் தினம், சாக்லேட் தினம் என்று சில தினங்களை கொண்டாடி அசத்தி வருவார்கள் காதலர்கள். குறிப்பாக காதலர் தினத்தன்று பார்க், பீச் என எங்கு சென்றாலும் ஜோடி ஜோடியாக தான் இருப்பார்கள்.

இந்த வருடம் ஞாயிற்று கிழமை அன்று காதலர் தினம் வருகிறது. இந்நிலையில் இலங்கையில் காதலர் தினம் கொண்டாட கூடாது எனவும் விதி மீறி கொண்டாடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் இலங்கை அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.மேலும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுடன், கலந்து கொள்ளும் காதலர்களும் உடனடியாக கைது செய்ய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளதால் காதலர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.