• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

காதலர்களின் நம்பிக்கை-லவ் லாக் ட்ரீயில் பூட்டு போட்டு சாவியை தூக்கி போட்டா காதல் பிரியவே பிரியாதாம்!

காதலர் தினம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் காதலர்கள் வித விதமான பரிசுகளை தங்களுக்குள் கொடுத்து மகிழ்வர். அன்றைய நாளில் தங்களது காதல் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக சிற்சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களிலும் காதலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


பிரான்சில் காதலர்கள் தங்களது காதல் நீண்ட நாட்கள் நட்டுக்க வேண்டும் என்பதற்காக காதல் தலைநகர் பாரிசில் இருக்கின்றசைனி என்ற ஆற்றங்கரையின் அருகிலுள்ள ஒரு கம்பத்தில் 2008 முதல் பூட்டு போட்டு, அதன் சாவியை ஆற்றில் வீசியும் வந்தார்கள். இந்த கம்பம் லவ் லாக் ட்ரீ என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்திலேயே மோதிரம் அணிந்து திருமணம் போன்ற நிகழ்வுகளும் நடப்பது உண்டு.



பாரிஸின் நகலாக விளங்கும் புதுச்சேரியிலும் ஒரு லவ் லாக் ட்ரீயை நிறுவி உள்ளனர்.இந்த இடத்திற்கு இப்போது வரை 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து காதலர்கள் வந்து தங்களது காதலை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த இடம் காதலர் தினத்தன்று அதிகமான காதலர்களுடன் களைகட்டும் என கூறப்படுகிறது.

4 views0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios