பிப்ரவரி 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த தினத்தன்று ஷாப்பிங் மால் போன்றவற்றில் ஏராளமான ஆபர்கள் போடப்படும். குறிப்பாக காதலர் தின கொண்டாட்டங்களில் சிறந்த ஜோடிகளை தேர்ந்தெடுத்தல், அவர்களுக்கு விருத்தளித்தல் மேலும் சின்ன சின்ன போட்டிகள் நடத்துதல் போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.

அமெரிக்காவில் உள்ள க்ராசிவில் என்ற பகுதியை சேர்ந்த POWERS LAW என்ற சட்ட ஆலோசனை மையம் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சலுகையை கொடுத்துள்ளது. அதாவது காதலர் தினத்திற்கு சிறப்பு செய்யும் விதமாக பிப்ரவரி 14 ஆம் தேதி வரை இலவசமாக விவாகரத்து பெற்று தரப்படும் என தெரிவித்துள்ளது. இந்த சலுகை காதலர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதோ இல்லையோ, சிங்கிள்ஸிற்கு வெறித்தனமான மகிழ்ச்சியை அளித்துள்ளது..