காதல் பற்றிய கற்பனை அதிகமாகி வரும் இந்த ஒரு காலகட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த காதல் ஜோடி இறக்கும் தருவாயிலும் காதலுடன் ஒருவொருக்கொருவர் ஆறுதல் செய்த நிகழ்வின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் பார்ட்டிங்க்டன் என்ற இடத்தை சேர்ந்த மார்கரெட் மற்றும் டேரிஃபிரித் காதல் ஜோடிகளின் வயது 91. இவர்கள் 70 வருடங்களாக இணைபிரியாமல் காதலுடனும், பாசத்துடனும் வாழ்ந்து வந்த நிலையில், இவர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அருகருகே உள்ள படுக்கையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது இருவரும் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு கண்கள் நிறைய காதலுடன் ஒருவொருக்கொருவர் ஆறுதல் செய்து கொண்ட காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டது.3 நாட்கள் இடைவெளியில் இவர்கள் உயிரிழந்த நிலையில், இறக்கும் தருவாயிலும் காதலுடன் ஆறுதல் செய்த இந்த முதிர்ந்த காதல் ஜோடிகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.