டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் CEO-வான எலான் மஸ்க், 2017 ஆம் வருடம் நியுராலிங் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியிருந்தார்.இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் மனித மூளையை இயந்திரத்துடன் இணைப்பதே ஆகும்.
.கிளப் ஹவுஸ் என்கிற பிரைவேட் சோசியல் அப்ளிகேஷன் இல் பேசிய எலான் மஸ்க், ஒரு குரங்கின் மூளையை இயந்திரத்துடன் இணைத்து வைத்துள்ளேன் என கூறியுள்ளார்
குரங்கின் மண்டைக்குள் சிப் !
ஒரு குரங்கின் மண்டைக்குள் வயர்லெஸ் சிப் ஒன்றை பொறுத்தியுள்ளோம். அந்த கருவி குரங்கின் எந்த இடத்தில் பொருத்தப்பட்டு உள்ளத்து என்பதை யாராலும் அவ்வளவு எளிதாக கண்டுபிடித்து விட இயலாது.இதனால் அந்த குரங்கு மூளைக்குள் வீடியோ கேம் விளையாடுகிறது. அது ஒரு சந்தோசமான குரங்கு, மேலும்மைண்ட் POND என்ற விளையாட்டையும் மற்றவர்களுடன் விளையாடி வருகிறது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மனுஷனுக்கு என்ன பயன் ?
இந்த சிப் ஐ மனிதன் மனதில் பொருத்தி கொள்வதன் மூலம் மூளைக்கு connect செய்ய முடியும் . மனித மூளை மற்றும் முதுகெலும்பு காயங்கள் போன்றவற்றை குணப்படுத்த இந்த சிப் உதவும் என்கிறார் எலான் மஸ்க்.
