அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா எல்.என்.ஜி நிலையங்களை அமைக்க 10,000 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது. இது போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு எரிபொருள் என்று உறுதியளிக்கிறார், அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

எல்.என்.ஜி எரிவாயு சி.என்.ஜி.யை விட அதிக ஆற்றல் அடர்த்தி கொண்டது.ஒற்றை நிரப்புதலில் 600-800 கி.மீ. ஓட்டம் கொடுக்கும் திறன் கொண்டது. எனவே சூப்பர் கூல் செய்யப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) பேருந்துகள் மற்றும் லாரிகளால் விரும்பப்படுகிறது. மேலும் டீசலை விட -40 சதவீதம் மலிவானது.
இதுவரை, இந்தியா வாகனங்களை இயக்க பெட்ரோல், டீசல், சி.என்.ஜி மற்றும் ஆட்டோ எல்பிஜி ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்துகிறது. எல்.என்.ஜி என்பது ஒரு புதிய எரிபொருளாகும். இது பெட்ரோல் போன்று விற்பனை நிலையங்களிலிருந்து விநியோகிக்கப்படும். மேலும் இது நீண்ட தூரப் பேருந்துகள் மற்றும் லாரிகளில் மட்டுமல்லாமல், சுரங்க உபகரணங்களை இயக்குவதிலும், ரயில் என்ஜின்களிலும் பயன்படுத்தப்படலாம்.
இதற்கு முன்னர் 50 எல்.என்.ஜி நிலையங்கள் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு பெருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.