உயிருக்கே ஆபத்தாகும் முகக்கவசம்கொரோனா ஊரடங்கு அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் இன்றி வெளியில் எங்கும் செல்ல முடியா சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வயதானவர்கள், இளம் பெண்கள்,கர்ப்பிணி பெண்கள், என அனைவரும் வெளி உடற்பயிற்சி மேற்கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். எனவே, முகக்கவசம் அணிந்து அவர்கள்,தீவிர உடற்பயிர்சியில், ஈடுபடும் பொழுது அவர்களுக்கு, உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக,மூளை மற்றும் இதய நோய்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.


 • உடலுக்குத் தேவைப்படும் முழுமையான காற்றோட்டத்துக்குத் தடை செய்கிறது

 • தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பது தடைபடுகிறது. சுவாச இயக்கத்துக்கு அது அதிக சிரமத்தை கொடுக்கிறது.

 • கடுமையான உடற்பயிற்சிகளின் போது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதை உணர முடியும்.

மூளை பாதிப்பு:


 • தசைப் பயிற்சி போன்ற கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடும் போது, நம்முடைய தசைகள் லாக்டிக் அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் கார்பன் டை ஆக்சைடாக மாற்றப்பட்டு உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. மிதமான உடற்பயிற்சியில் இருந்து தீவிரமான உடற்பயிற்சிக்குச் செல்லும் போது, அதிகப்படியான ஆக்ஸிஜன் தேவைப்படுவதாலும், வேகமான சுவாசத்தாலும், முகக் கவசத்துக்குள் சுழன்று கொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடையே மறுபடியும் மறுபடியும் உள்ளிழுக்க நேரிடுகிறது,


 • அப்போது உடலின் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், மூளை தனது செயல் திறனை முற்றிலும் நிறுத்திக் கொள்ளும் ஆபத்தான சூழல் கூட உருவாகலாம். இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுயநினைவை இழக்க நேரிடலாம்.


இதய பாதிப்பு:


 • நீண்ட தூரம் முகக்கவசம் அணிந்து ஓடுபவர்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவு வெகுவாகக் குறைந்து, கார்பன் டை ஆக்சைடு அளவுக்கு அதிகமாக அதிகரித்து விடும். இது ஆக்சிஜன் குறைந்த உயரமான மலைப் பகுதியில் செய்வதற்கு இணையானது.


 • இதனால், இதயத்தின் பணிச்சுமை அதிகரிக்கும். செய்வது உடலுக்கு நல்லதுதான். நம்மை நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்றுவதால், அதுவும் நமக்கு அவசியமே. எனினும், இரண்டையும் ஒன்றாகச் செய்வது, நமக்கு ஆபத்தாக மாறுவதற்கே சாத்தியம் அதிகம். எனவே, அணிந்தபடி செய்வதைத் தவிர்ப்பதுதான் நல்லது.


அதேநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது 6 அடி தூரம் தனி மனித இடைவெளி காப்பதும் முக்கியம். குழு குழுவாகப் பேசிக் கொண்டு இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.

Earnbounty_1068_260_0208.jpg
 • Facebook
 • Twitter
 • YouTube
 • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

 • Facebook
 • Twitter
 • Instagram
 • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios