டெம்பல்-டுட்டெல் வால்மீனிலிருந்து லியோனிட்ஸ் வெளிப்படுகிறது.இது சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 33 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இந்த விண்கற்கள் வினாடிக்கு 71 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றன.

லியோனிட் விண்கல்லை, நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்தியாவிலிருந்து காணலாம் என்று timeanddate.com தெரிவித்துள்ளது.
சி.என்.என் அறிக்கையின்படி, லியோனிட் விண்கல்லில் நெருப்பு பந்துகள் அடங்கும். இவை நீண்ட வால்களுடன் வண்ணமயமாக அடிவானத்திற்கு அருகில் தோன்றும் விண்கற்கள்.
அவை நள்ளிரவுக்குப் பிறகு மற்றும் விடியற்காலையில் அதிகம் காணப்படும். இதனை சாதரணமாக கண்களால் பார்க்கலாம். தொலைநோக்கிகள் பாதையை சுருங்குவதால்,அவற்றை உபயோகிக்க தேவையில்லை. லியோனிட்ஸ் வடக்கு பகுதியில் அதிகம் காணப்படும், ஆனால் தெற்கு பகுதியில் இருந்தும் காணலாம். இந்தியா வடக்கு பகுதியில் உள்ளது.