
முதலில் "மேஜிக் கியூப்" என்று அழைக்கப்பட்ட இது உலகின் மிக அதிகம் விற்பனையாகும் பொம்மை என்று கருதப்படுகிறது
ஒரு ரூபிக் க்யூப் எங்கிருந்தாலும், அதை உங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு விளையாடத்தூண்டும்.
1. விளையாட்டு ஒரு பொதுவான இலக்கை முன்வைக்கிறது
கனசதுரத்தின் ஒவ்வொரு முகத்தையும் சீரமைப்பது குழுவில் இருக்கும் போது நாம் அடைய விரும்பும் இலக்கை நோக்கிய எண்ணமாக வரையறுக்கப்படுகிறது. தெளிவான குறிக்கோள்கள் கொண்ட தலைமை உடைய ஒரு குழு சிறந்த முடிவுகளைத் தருகிறது.
2. ஒவ்வொரு துண்டு வேறுபட்டது
ஒவ்வொரு துண்டும் தனக்கென தனி இடத்தில் பொருந்துவது போல
ஒவ்வொரு குழு உறுப்பினர்களையும் அவர்களின் திறமை அறிந்து உபயோகிக்கவேண்டும்.
3. கன சதுரம் ஒரு அமைப்பு
ஒரு துண்டு இல்லையென்றாலும் ரூபிக் குபேயை சேர்க்கமுடியாது. அதுபோல தலைமைப்பண்பில் செயல், ஆற்றல், திறன் என எது இல்லாமல் போனாலும் வெற்றியடைய முடியாது
4. அனைத்து பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன
அனைத்துப் பகுதிகளையும் ஒன்றிணைத்தால் தான் ஒரு சரியான முடிவு கிடைக்கும். அது போல தலைமைப்பண்பு ஒற்றுமையை நிலைநாட்டுவதாக இருக்கவேண்டும்.
5. ஒவ்வொரு தனிப்பட்ட இயக்கமும் முழுதையும் பாதிக்கிறது
ஒவ்வொரு தனிமனிதச் செயல்களும் குழுவின் வெற்றிக்கு வித்திடுகின்றன.தலைவர் சுயநலமாக செயல்பட்டால் குழு வெற்றி பாதிக்கப்படும்.