கொரோனா நோய் தொற்றினால் ஒரு வருடத்திற்கு மேல் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். தற்போது ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்க பட்டிருந்ததால் மக்கள் அனைவரும் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேனீ மாவட்டம், கோட்டக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கின்ற மேற்கு தொடர்ச்சி மலையில் ( கொழுக்கு மலையில் )கண்ணிற்கு எட்டிய தூரம் வரை பசுமையாகவும், சில இடங்களில் தேயிலை தோட்டங்களும், உயரமான மலை குன்றுகளும் காட்சி அளிக்கின்றன. கைக்கு எட்டும் தூரத்தில் மேக கூட்டங்களும் , பனி மூட்டமும் காண்போரை கவரும் விதமாக அமைந்துள்ளது.இந்த பகுதிக்கு வரும் மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால் சுற்றுலா துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.