கிசாவின் பெரிய பிரமிடுகள் உலகில் மிகவும் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். பண்டைய எகிப்திய பாரோக்கள் அவற்றை என்றென்றும் நிலைத்திருக்கக் கட்டினார்கள். இப்போது, 4,500 ஆண்டுகளுக்குப் பிறகு, எகிப்தியர்கள் அவற்றை புதுப்பிக்கின்றனர். நாட்டின் மிகவும் பிரபலமான பாரம்பரிய தளத்தை சுற்றுலாப்பயணிகளுக்கு அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், 17 மில்லியன் யூரோ செலவிட்டு புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுப்பித்தல், கிசா பீடபூமியை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ஸ்பின்க்ஸ் மற்றும் குஃபுவின் பெரிய பிரமிடு ஆகியவையும் அடங்கும். புதுப்பித்தல் திட்டத்தில் ஒரு புதிய பார்வையாளர் மையம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார பேருந்து,உணவகம் ஆகியவை அடங்கும்.
எகிப்தின் கிசா பிரமிடுகளை காண வரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது சிறந்த உணவையும் அனுபவிக்க முடியும், பிரமிட் பீடபூமியில் முதன்முதலில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகம் அதன் சுற்றுப்புறங்களுடன் ஒத்துபோவதற்கும், இப்பகுதியில் நிலையான சுற்றுலா திட்டத்தின் உறுதிப்பாட்டை நிரூபிப்பதற்கும் அனைத்தும்இயற்கை பொருட்களாலும் கட்டப்பட்டுள்ளது. எகிப்தில் உள்ள பழங்கால கவுன்சிலின் கூட்டாண்மைடன், இந்த உணவகத்திற்கு ஓராஸ்காம் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்கின் தலைவரான திரு நாகூப் சாவிரிஸ் நிதியளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் "எகிப்திய நாகரிகத்தின் மகத்துவத்தையும் இந்த வரலாற்று தளத்தின் சிறப்பையும் நிலைநிறுத்துவதே எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது, அதே நேரத்தில் இந்த பகுதி சுற்றுச்சூழலை பாதிக்காமல் இந்த வேலையை நாங்கள் செய்தது பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவத்தை உருவாக்குகிறது",என்றார்.