• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இந்த ஆண்டின் சிறந்த குழந்தை

15 வயதான இந்திய-அமெரிக்கன் கீதாஞ்சலி ராவ், ஒரு புத்திசாலித்தனமான இளம் விஞ்ஞானி. மேலும் டைம் பத்திரிகையால் இந்த ஆண்டின் சிறந்த குழந்தை என்று பெயரிடப்பட்டுள்ளார். ஓபியாய்டு போதை, மாசடைந்த குடிநீர் மற்றும் சைபர் கொள்ளை ஆகியவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.


5,000 க்கும் மேற்பட்ட போட்டியாளர்களின் நடுவே TIME இன் இந்த வருட சிறந்த குழந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டைம் ஸ்பெஷலுக்காக நடிகரும் ஆர்வலருமான ஏஞ்சலினா ஜோலி கீதாஞ்சலியை பேட்டி கண்டார்.



அந்த பேட்டியில் உலகெங்கிலும் உள்ள சிக்கல்களைத் தீர்க்க இளம் கண்டுபிடிப்பாளர்களின் உலகளாவிய சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது நோக்கம் பற்றி கீதா தெரிவித்தார்.


அவர் இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்பில் இருந்தபோது, ​​சமூக மாற்றத்தை உருவாக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று யோசிக்கத் தொடங்கினார்.




நீர் தர ஆராய்ச்சி ஆய்வகத்தில் கார்பன் நானோகுழாய் சென்சார் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்ய விரும்புவதாக பெற்றோரிடம் சொன்னபோது தனக்கு 10 வயது என்று அவர் கூறினார்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios