• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

தோண்ட தோண்ட வெற்றி!!!

கிமு 600 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால மட்பாண்டத் துண்டுகளின் "தனித்துவமான கருப்பு பூச்சுகளில்" நானோ பொருட்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் - இது தமிழ்நாட்டின் கீழடியில் உள்ள ஒரு தொல்பொருள் இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.



தமிழ்நாட்டிலுள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த பூச்சுகள்,"இதுவரை காணப்பட்டதிலேயே மிகப் பழமையானது ஆகும்.


பண்டைய கலைப்பொருட்களில் பூச்சுகள் பொதுவாக மாறிவரும் பருவ நிலைகளால் நீண்ட காலம் நீடிக்காது. ஆனால் சி.என்.டி எனப்படும் கார்பன் நானோடூப் இவற்றை 2600 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்க வைத்து உள்ளது , "என்று கூறுகின்றனர்.


ஆனால் அந்த கால மக்கள் வேண்டுமென்றே சி.என்.டி.களைச் சேர்த்திருக்க மாட்டார்கள்.அதற்கு பதிலாக, அவர்கள்மண்பாண்டங்களை சூடுபடுத்தும் போது, ​​இவை தற்செயலாக உருவாகியிருக்கும், ”என்று ஷைஜுமோன் கூறினார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios