கென்யாவில் கிபிவோட் கண்டி எனும் வீரர் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினில் நடந்த ஆண்கள் அரை மராத்தான் உலக சாதனையை 57 நிமிடங்கள் 32 வினாடிகளில் முறியடித்தார். செப்டம்பர், 2019 இல் அவரது தோழர் ஜெஃப்ரி கம்வோரர் அமைத்த முந்தைய சாதனையை(58 நிமிட 01 வினாடி) அரை நிமிடம் வித்தியாசத்தில் முந்தினார்.

போட்டியில் வென்ற முதல் நான்கு விரர்களும் முந்தைய உலகின் சிறந்த போட்டிகளில் ஓடிவர்கள் ஆவர். உகாண்டாவின் ஜேக்கப் கிப்லிமோ 57:37 நிமிடத்தில் இரண்டாவது இடத்தையும், கென்ய ரோனெக்ஸ் கிப்ருடோ 57:49 இல் மூன்றாவது இடத்தையும், கென்ய அலெக்சாண்டர் முடிசோ 57:59 இல் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.