• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மூடப்பட்ட பாத்ரூமில் சிறுத்தையின் கண் முன் 7 மணி நேரம் - மரண பீதியில் படுத்திருந்த நாய்!!!


கர்நாடகாவில் பிள்னலே எனும் கிராமத்தில் ஒரு தெரு நாயை விரட்டியவாறு சிறுத்தை சென்றது.பயந்து போன அந்த தெரு நாய் ஒரு பாத்ரூமிற்குள் சென்றது. நாயை துரத்தியவாறு சிறுத்தையும் பாத்ரூமிற்குள் சென்றது. இதை அறியாத அந்த வீட்டில் உள்ள ஒரு நபர் பாத்ரூம் கதவை திறக்கும் போது கதவிற்கு அடியில் சிறுத்தையின் வால் இருப்பதை பார்த்து விட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.



வனத்துறையினர் வேகமாக வந்து, ஜேசிபி மூலம் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இந்த நிகழ்வு நடைபெற்ற 7 மணி நிறம் சிறுத்தையோ ஏதோ ஒரு ரூமில் அடைபட்டுவிட்டோமே என்ற பயத்தில் ஒரு ஓரமும் , நாயோ சிறுத்தை நம்மை தின்றுவிடுமோ என்ற பீதியில் ஒரு ஓரமும் ஒரே ரூமில் படுத்திருந்தன.


வனத்துறையினர் சிறுத்தையை பத்திரமாக மீட்டு காட்டிற்குள் விட்டனர். தெரு நாயும் தப்பிடித்தோம் பிழைத்த்தோம் என்று பாத்ரூம் கதவை திறந்தவுடன் வெளியே ஓடி விட்டது..

1 view0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios