இயற்கையை மனிதன் அழிப்பதால் வரும் பின்விளைவுகளை மனிதன் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறான். சுனாமி, நிலநடுக்கம், மண் சரிவு, போன்றவை இயற்கை பேரிடர்களுள் குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமான ஒன்றாக இருக்க கூடிய நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.